UPDATED : அக் 21, 2026 07:28 PM
ADDED : அக் 21, 2026 07:26 PM
அ நிறம் | அளவு
போடி: போடி அருகே சிலமலை டி.எஸ்.பி., காலனியை சேர்ந்தவர் ஜோதி 59.
அருகே குடியிருப்பவர் சதீஷ் 34. மது போதையில் அடிக்கடி தெருவில் நின்று தகாத வார்த்தையால் பேசி வந்து உள்ளார். ஜோதி கண்டித்து உள்ளார். ஆத்திரம் அடைந்த சதீஸ் ஜோதியை திட்டி அடித்து கீழே தள்ளி விட்டுள்ளார். அதன் பின் பெட்ரோல் பாட்டிலை எடுத்து வந்து ஜோதி வீட்டில் முன்பு இருந்த விறகு, தென்னை மட்டை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். அருகே வந்தால் பெட்ரோல் ஊற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். ஜோதி புகாரில் போடி தாலுகா போலீ சார் சதீஸ்யை கைது செய்தனர்.
