ADDED : அக் 30, 2026 09:58 PM
அ நிறம் | அளவு
தேனி: கம்பம் வடக்கு போலீஸ் எஸ்.ஐ., கண்ணன் தலைமையில் போலீசார் ஐசக்போதகர் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த சுருளிப்பட்டி காளியம்மன் கோயில் தெரு சக்திகுமாரை விசாரித்தனர். அவரிடம் ரூ.250 மதிப்புள்ள 5 கிராம் கஞ்சா இருந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து சக்திகுமாரை கைது செய்தனர்.
