sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

 ஆட்டோ டிரைவர்கள், மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்றவர் கைது

/

 ஆட்டோ டிரைவர்கள், மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்றவர் கைது

 ஆட்டோ டிரைவர்கள், மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்றவர் கைது

 ஆட்டோ டிரைவர்கள், மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்றவர் கைது


ADDED : நவ 19, 2025 06:37 AM

Google News

ADDED : நவ 19, 2025 06:37 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி கருவேல்நாயக்கன்பட்டி சந்தனமாரியம்மன் கோயில் அருகே ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 117 போதை மாத்திரைகள், 100 கிராம் கஞ்சா ஆகியவற்றை ஆட்டோ டிரைவர்கள், பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்த வள்ளுவர் காலனி அருண்குமாரை 25, போலீசார் கைது செய்தனர்.

எஸ்.ஐ., ராஜமாணிக்கம் மற்றும் போலீசார் கருவேல்நாயக்கன்பட்டி சந்தன மாரியம்மன் கோயில் அருகே ரோந்து சென்றனர். அப்போது அருண்குமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 100 கிராம் கஞ்சா, 117 எண்ணிக்கை கொண்ட TAPENTADOL 110 மாத்திரைகளை வைத்திருந்தார். அவரை விசாரித்த போது ஆட்டோ டிரைவர்கள், பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்ய இருந்ததாக கூறினார். அவற்றை கைப்பற்றிய போலீசார் அருண்குமார், அரண்மனைப்புதுார் முல்லை நகர் கஞ்சா வியாபாரி மனோஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அருண்குமாரை கைது செய்து, மனோஜை தேடி வருகின்றனர்.

மன நல டாக்டர் ஒருவர் கூறியதாவது: மனித மூளையில் பல்வேறு அடுக்குகளில் சிறிய அளவிலான ரத்த நரம்புகள் உள்ளன.

இதில் opioid receptors என்ற புள்ளிகளை (முடிச்சுகளை) துாண்டி விடும் போது, ஒரு வித மயக்க நிலை ஏற்படும். அதற்குத்தான் இந்த TAPENTADOL எனப்படும் மாத்திரையை மயக்கவியல், புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் டாக்டர்களால் பரிந்துரைக்கப்படுவது வழக்கம்.

இவற்றை அதிதீவிர காயங்களுக்கான அறுவை சிகிச்சையின் போதும், தாங்க முடியாத வலி ஏற்படும் போதும் வலி நிவாரணியாக பயன்படுத்துவதும் வழக்கம். இதனை மயக்கவியல்துறை, மூளை நரம்பியல் டாக்டர்கள் பரிந்துரைப்பர். அதிலும் பாதிக்கப்பட்டவர் பயன்படுத்தும் மாத்திரையின் அளவு குறித்து தெளிவாக ரசீதில் டாக்டர்கள் குறிப்பிட்டு இருப்பர். அரசு மருத்துவமனைகளில் இவ்வகை மாத்திரைகள் தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதற்காக டாக்டர்கள், மருந்தாளுநர்கள் பூட்டி வைத்து தேவைக்கு ஏற்ப பயன்படுத்துவர்.

சந்தையில் ஒரு மதுபாட்டில் வாங்கி சாப்பிட்டால் ரூ.200 வரை ஆகும். ஆனால் ஒரு மாத்திரை ரூ.50க்கு கிடைக்கிறது. இதனை பொடியாக்கி சிரஞ்ச் மூலம் நரம்பில் செலுத்துகின்றனர். இதனால் 2 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை போதை ஏறுவதால் சந்தையில் அதிக புழக்கத்தில் உள்ளது. தொடர்ந்து பயன்படுத்தினால் உயிருக்கு ஆபத்து என்றார்.






      Dinamalar
      Follow us