ADDED : அக் 19, 2025 03:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.ஐ., அருண் தலைமையிலான போலீசார் வீரபாண்டி அருகே பைபாஸ் ரோட்டில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வழியாக சென்ற கீழகூடலுார் மூனுசாமி கோவில்தெரு அசோக் 29,ஐ போலீசார் சோதனை செய்தனர். அவரிடம் இருந்த 3 பொட்டலங்களில் ரூ. 1.03 லட்சம் மதிப்பிலான 10 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். விசாரணையில் ஒரிசாவில் இருந்து தேனி மாவட்டத்தில் விற்பனை செய்வதற்காக கஞ்சா வாங்கி வந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.