/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூதாட்டியிடம் தங்க செயின் பறித்தவர் கைது
/
மூதாட்டியிடம் தங்க செயின் பறித்தவர் கைது
ADDED : ஜூலை 27, 2025 12:27 AM
கம்பம்: கம்பம் காந்தி நகரை சேர்ந்தவர் குலசம்மாள் 64, இவருடைய மகன் இதே ஊரில் வங்கி மேலாளராக உள்ளார். குலசம்மாள் ஜூலை 23ல் காலை வீட்டின் முன்பு நடை பயிற்சி செய்து கொண்டிருந்தார்.
அப்போது, டூவீலரில் வந்த மர்ம நபர் குலசம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை பறித்துள்ளார். குலசம்மாள் செயினை இறுக பற்றியதால், செயின் அறுந்து ஒரு பகுதி குலசம்மாள் கையிலும், ஒரு பகுதி தரையிலும், ஒரு பகுதி திருடன் கையிலும் சிக்கியது குலசம்மாள் சத்தம் போடவே திருடன் டூவீலரில் தப்பியோடி விட்டான்.
புகாரில் கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து கம்பம் ரேஞ்சர் ஆபீஸ் ரோட்டை சேர்ந்த வேல்முருகன் 25யை கைது செய்தனர். அவரிடமிருந்து மூதாட்டியிடம் பறிக்கப்பட்ட 5 கிராம் செயின் மீட்கப்பட்டது.