ADDED : ஏப் 27, 2026 11:32 PM

அ நிறம் | அளவு
மூணாறு:கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் முண்டூர் டைட்டஸ்ஜார்ஜ் 36. இவரை மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் ரூ. 15 கோடி கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் தேடி வந்தனர்.
அவர் இடுக்கி மாவட்டம் வாகமண் அருகே புள்ளிக்கானம் பகுதியில் தனியார் விடுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிந்தது. இடுக்கி எஸ்.பி., சாபுவர்க்கீஸ்க்கு தனிப்படை போலீசாரின் உதவியுடன் நாசிக் போலீசார் விடுதியில் தங்கியிருந்த டைட்டஸ் ஜார்ஜை கைது செய்து மகாராஷ்டிராவுக்கு அழைத்து சென்றனர்.
