/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்தவருக்கு அடி
/
விபத்தில் சிக்கியவருக்கு உதவி செய்தவருக்கு அடி
ADDED : அக் 09, 2025 04:09 AM
பெரியகுளம் : பெரியகுளம் தென்கரை மாணிக்கராஜ் 44. முருகமலை நகரில் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு டூவீலரில் சென்றார்.-
தேவதானப்பட்டி ரோட்டில் சென்ற போது அதே ரோட்டில் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மாசாணம் 44, டூவீலரில் சென்றவர், முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதி கீழே விழுந்தார். இதனை பார்த்த மாணிக்கராஜ் விபத்தில் பாதிக்கப்பட்டவரை காப்பாற்றும் எண்ணத்தில் தூக்கி உதவி செய்துள்ளார்.
மது போதையில் இருந்த மாசாணம் உதவி செய்த மாணிக்கராஜை அவதூறாக பேசி, அலைபேசியால் அடித்து காயப்படுத்தினார். பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு மாணிக்கராஜ் அனுப்பி வைக்கப்பட்டார். வடகரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.