ADDED : ஜன 09, 2026 05:53 AM
அ நிறம் | அளவு
கம்பம்: கம்பம் கிராமச் சாவடி தெருவில் வசிப்பவர் ராஜா 52, இவரது மனைவி ராஜேஸ்வரி 48, இவர்களது மகன் சுதர்சனன் 28, கொத்தனார் வேலை செய்தார். இவருக்கு வலிப்பு நோய் உள்ளது. கடந்த டிச. 31 ல் கம்பம் ஆங்கூர் பாளையம் ரோட்டில் கட்டடம்
ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த போது வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. கம்பம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் இறந்தார். கம்பம் தெற்கு போலீசார் விசாரிக் கின்றனர்.
