/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நகராட்சி பாதாள சாக்கடை விரிவாக்கப் பணி மந்தம் பள்ளத்தில் விழுந்தவரின் கால்முறிவு

ADDED : நவ 03, 2025 04:31 AM

பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சியில் பொது மக்கள் அதிகளவில் சென்று வரும் குமரவடிவேல் சந்தில் பாதாளச்சாக்கடை விரிவாக்க பணி மந்த கதியில் நடப்பதால் பள்ளத்தில் விழுந்து பொது மக்கள் காயப்படும் நிகழ்வு தொடர்கிறது.
இந்நகராட்சியின் 28 வது வார்டில் ஏராளமான பொது மக்கள் வசிக்கின்றனர். மூன்றாந்தல் பகுதியிலில் இருந்து 200 மீட்டர் துாரம் உள்ள வணிகவைசியர் தெரு, குமரவடிவேல் சந்தில் எளிதாக சென்று தினமும் ஏராளமான பள்ளி மாணவர்கள், மாணவிகள், பொது மக்கள் மாரியம்மன் சன்னதி தெரு, பஜார் வீதி, தெற்குத் தெரு சென்று வருகின்றனர்.
இந்த பகுதியில் கடந்த மாதம் பாதாளச் சாக்கடை விரிவாக்கப் பணிக்கு 'பேவர் பிளாக்' கற்கள் அகற்றப்பட்டன. பள்ளம் தோண்டப்பட்டு பல நாட்களான பின் பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்தகட்ட பணி நடக்காமல் முடங்கியுள்ளது. இதனால் தினமும் இப்பகுதியை கடந்து செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து காயம் அடைந்து பாதிக்கப்படுகின்றனர்.
இரு தினங்களுக்கு முன் பள்ளத்தில் விழுந்து வாசு என்பவரின் கால் முறிந்தது. பள்ளி மாணவர்கள் விழுந்து அசம்பாவிதம் ஏற்படுவதற்குள், கமிஷனர் தமிஹா சுல்தானா பார்வையிட்டு பணியினை விரைந்து முடிக்க உத்தரவிட வேண்டும்.