/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
யாசகம் கேட்டவரை பஸ்சில் தள்ளி கொலை செய்தவருக்கு 10 ஆண்டு
/
யாசகம் கேட்டவரை பஸ்சில் தள்ளி கொலை செய்தவருக்கு 10 ஆண்டு
யாசகம் கேட்டவரை பஸ்சில் தள்ளி கொலை செய்தவருக்கு 10 ஆண்டு
யாசகம் கேட்டவரை பஸ்சில் தள்ளி கொலை செய்தவருக்கு 10 ஆண்டு
ADDED : டிச 16, 2025 11:19 PM

தேனி: தேனி பஸ்ஸ்டாண்டில் யாசகம் கேட்ட மனோஜ் 51, என்பவரை அரசு பஸ் டயரில் தள்ளி கொலை செய்த பெரியகுளம் கார்த்திக்ராஜா 28வுக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை எஸ்.பி.ஐ., காலனி கார்த்திக்ராஜா. இவர் 2025 ஜூன் 15ல் தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் திருப்பூர் பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்தார். அவரிடம் கேரளா, ஏலப்பாறை அருகே தண்ணிக்காலம் பகுதியில் வசிக்கும் மனோஜ் 51, யாசகம் கேட்டார்.
இருவருக்கும் தகராறு ஏற்பட்டு தேனியில் இருந்து மேட்டுப்பாளையம் புறப்பட்ட பஸ்சில் மனோஜை கார்த்திக்ராஜா தள்ளிவிட்டார். இதில் தலையில் பஸ் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே மனோஜ் இறந்தார். தேனி போலீசார் கார்த்திக்ராஜாவை கைது செய்தனர்.
இந்த வழக்கு தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு வழக்கறிஞர் பாஸ்கரன் ஆஜரானார். கார்த்திக்ராஜாவிற்கு 10 ஆண்டு சிறை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து, முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தீர்ப்பளித்தார். சம்பவம் நடந்து 5 மாதம்15 நாட்களில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

