ADDED : ஜூன் 26, 2025 01:49 AM

பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை பகுதி முதலிக்கோட்டை தெருவின் நடுவில் மேன்ஹோல் உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால் டூவீலர்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர்.
இப்பகுதியில் முதலிக்கோட்டை தெருவானது மாரியம்மன் சன்னதி தெருவில் துவங்கி ஒரு கி.மீ., துாரம் உள்ள தண்டுப்பாளையம் பகுதியில் முடிகிறது.
முக்கியத் தெருவின் நடுவில் பாதாளச் சாக்கடை மேன்ஹோல் உயரமாக உள்ளது. பெரியகுளத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு இந்தத் தெருவை கடந்து செல்ல வேண்டும். டூவீலர்களில் செல்பவர்கள் இந்த மேன்ஹோலில் தெரியாமல் ஏறி, கீழே விழுகின்றனர்.
கடந்த வாரம் வடுகபட்டியைச் சேர்ந்த ஒருவர் குடும்பத்துடன் டூவீலரில் செல்லும் போது தடுமாறி விழுந்து காயங்கள் ஏற்பட்டன.
பெரிய அளவிலான அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் நகராட்சி நிர்வாகம் மேன்ஹோல் மூடியை குறைத்து தரை மட்ட அளவிற்கு மேன்ஹோல் அமைக்க வேண்டும்.-