ADDED : பிப் 27, 2026 07:32 AM
அ நிறம் | அளவு
கூடலுார்: லோயர்கேம்ப் அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா தலைமை ஆசிரியை கவிதா தலைமையில் நடந்தது.
சி.இ.ஓ., நாகேந்திரன், டி.இ.ஓ.,சுருளிவேல், கூடலுார் நகராட்சி தலைவர் பத்மாவதி முன்னிலை வகித்தனர். தி.மு.க. நகர செயலாளர் லோகந்துரை,ந.ம.மு.க., கட்சி நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா, துணை பொது செயலாளர் செல்வேந்திரன் பரிசு வழங்கினர்.
கவுன்சிலர் தினகரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பிரியங்கா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கற்பகம், ஆசிரியர்கள் சூர்ய பாலாஜி, தெய்வமணி, வெங்கட்ராமன், சதீஷ்குமார், நிர்பன்குமார் ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவிற்கு வந்த பெற்றோர்களுக்கும் மஞ்சள் துணிப்பை கொடுத்து பாலிதீன் பைகள் பயன்படுத்தக் கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
