ADDED : மார் 06, 2026 06:02 AM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் ஒன்றியம், கெங்குவார்பட்டி பேரூராட்சி, குள்ளப்புரம் ஊராட்சி பகுதியில் வீடு இல்லாத பட்டியலின மக்களுக்கு, அரசு புறம்போக்கு நிலங்களில் வீட்டுமனை பட்டா வழங்க கோரி, கலெக்டர் அலுவலகத் தில் கடந்தாண்டு செப்.30ல் மனு கொடுக்கப்பட்டது.
இவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தி பெரியகுளம் தாசில்தார் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் சங்கரசுப்பு தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் வெண்மணி, தாலுகாகுழு
உறுப்பினர்கள் ராமர், மன்னர் மன்னன், வேலுமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
