தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/மாவூற்று வேலப்பர் கோயில் பட்டுப்போன மரத்தால் அபாயம்

மாவூற்று வேலப்பர் கோயில் பட்டுப்போன மரத்தால் அபாயம்

மாவூற்று வேலப்பர் கோயில் பட்டுப்போன மரத்தால் அபாயம்


UPDATED : அக் 04, 2026 05:35 AM

ADDED : அக் 03, 2026 04:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 05:35 AM ADDED : அக் 03, 2026 04:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயில் வளாகத்தில் வாகனங்கள் நிறுத்தம் இடம் அருகே பட்டுப்போன மரத்தால் விபத்து அபாயம் உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். இக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரையில் நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். மாதாந்திர கார்த்திகை, பவுர்ணமி, அமாவாசை நாட்களிலும் பக்தர்கள் அதிகம் வந்து செல்கின்றனர். கோயில் வளாகத்தின் நுழைவுப் பகுதியில் உள்ள ஆர்ச் அருகே வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் பட்டுப்போன மரம் ஆபத்து ஏற்படுத்துவதாக உள்ளது. கடந்த பல மாதங்களாக பட்டுப்போன மரத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கை இல்லை. காற்று, மழையால் மரம் விழுந்து,கிளைகள் ஒடியவும் வாய்ப்புள்ளது. பக்தர்கள் நடமாடும் பகுதியில் உள்ள ஆபத்தான பட்டுப்போன மரத்தை அப்புறப்படுத்த கோயில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us