தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ மாணவர்களுக்கு மருத்துவ முகாம்

 மாணவர்களுக்கு மருத்துவ முகாம்

 மாணவர்களுக்கு மருத்துவ முகாம்


ADDED : ஜன 28, 2026 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 05:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் தேனி பி.சி.,கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

மாவட்ட உதவி திட்ட அலுவலர் மோகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி முகாமை துவக்கி வைத்தனர். தேனி வட்டாரத்தில் உள்ள அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பெற்றோருடன் பங்கேற்றனர். எலும்பு முறிவு, மனநலம், குழந்தைகள் நலன், கண்பார்வை, காது மூக்கு தொண்டை உள்ளிட்ட பிரிவுகளில் மருத்துவர்கள் பங்கேற்று மாணவர்களுக்கு ஆலோசனை, மேல்சிகிச்சைக்கு பரிந்துரை கடிதங்கள் வழங்கினர்.

மாணவர்கள் 25 பேருக்கு தேசிய அடையாள அட்டை, 10 பேருக்கு வழித்துணையாளர் பஸ் பாஸ், 28 பேருக்கு ரயில் பாஸ், 21பேருக்கு நலவாரிய அட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பி.இ.ஓ., ஸ்ரீதேவி, பள்ளி தலைமை ஆசிரியை ஸ்டெமில்டா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி, வட்டார மேற்பார்வையாளர் மனோரஞ்சிதம், வளமைய ஒருங்கிணைப்பாளர் இந்திராணி, சிறப்பு பயிற்றுநர்கள் முகாமை ஒருங்கிணைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us