ADDED : செப் 20, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
கூடலுார், செப்.
21-
கூடலுாரில் ஏ.என்.டி. கல்வி மருத்துவம் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை, சேவா பாரதி அமைப்பு இணைந்து பொது மருத்துவ முகாம் நடத்தினர். அறக்கட்டளை தலைவர் ஜெயராஜசேகர் தலைமை வகித்தார். சேவா பாரதி அறங்காவலர் வினோபா முன்னிலை வகித்தார். நுரையீரல் சிறப்பு டாக்டர் நிரஞ்சன் பிரபாகர், காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் ஜீவா, இருதய டாக்டர் பாண்டியன் ஆகிய டாக்டர்கள் பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கினர். அறக்கட்டளை பொருளாளர் திருவேங்கட ராமானுஜம், சேவா பாரதி தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
