ADDED : செப் 25, 2026 05:42 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.26–தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியில் கல்லுாரியில் என்.எஸ்.எஸ்., திட்டம், வாசன் கண் மருத்துவமனை இணைந்து கண் பரிசோதனை முகாம் நடத்தினர்.
கல்லுாரி செயலாளர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். முகாமில் இளங்கலை முதலாமாண்டு மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர். முகாமில் கண்பாதிப்புகளை தவிர்ப்பது, கண் ஆரோக்கியம், பார்வை குறைபாடுகளுக்கான காரணங்கள், அதிக நேரம் அலைபேசி, கணினி பயன்படுத்துவதால் ஏற்படும் கண்பிரச்னைகள் பற்றி மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. என்.எஸ்.எஸ்., அலுவலர் முத்துவேல் முகாமை ஒருங்கிணைத்தார்.
