ADDED : டிச 31, 2024 06:44 AM

காக்க..காக்க...சிறுநீரகம் காக்க
உடலில் சிறுநீரகம் முக்கிய உறுப்பாக உள்ளது. இதனை பாதுகாப்பது மிக முக்கியமாகும். சீறு நீரகத்தில் கல் அடைப்பு பிரச்னை வராமல் தவிர்ப்பது எவ்வாறு என டாக்டர் அபிமன் கவுதம் கூறியதாவது: சிறுநீரக கல்லடைப்பால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரித்து வருகின்றனர். கல் அடைப்பு பிரச்னை ஏற்படுவதற்கு தற்போதைய உணவுப்பழக்க வழக்கம், போதிய அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளாதது முக்கிய காரணங்கள் ஆகும். கல்லடைப்பு பிரச்னையில் இருந்து தப்பிக்க தினமும் 3 லிட்டருக்கும் குறைவில்லாமல் தண்ணீர் எடுக்கொள்ள வேண்டும். எலுமிச்சை, ஆரஞ்சு ஜூஸ், இளநீர், கேரட், பாகற்காய், வாழைப்பழம், அன்னாச்சிபழம், பார்லி, பாதாம், மக்காச்சோளம், கொள்ளு சாப்பிட வேண்டும். அதிக அளவிலான மாமிச உணவுகள், தக்காளி ,சப்போட்டா, காளான், முந்திரி, காளிபிளவர், கத்திக்காய், சர்க்கரை வள்ளி கிழங்கு, சாக்லேட் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். என்றார். மருத்துவ ஆலோசனைக்கு 98425 33711
.---