ADDED : டிச 31, 2024 06:44 AM

பல் சொத்தை, பல் கூச்சம், கரையை உடனே கவனியுங்கள்...
ஆரோக்கியமான வாழ்க்கை என்று வரையறுக்கும் போது அதில் பற்களின் பராமரிப்பும் முக்கியத்துவம் பெறுகிறது. பல் சொத்தை, பல்கூச்சம், வாய்ப்புண் ஆகியவற்றை ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு பாதிப்புகள் வரும் என்கிறார் பல் டாக்டர் முத்தாரம்.
அவர் கூறியதாவது: பல் சொத்தை ஏற்பட சரியாக பல் துலக்காதது, இனிப்பு அதிகம் சாப்பிடுவது, வாய் கொப்பளிக்காமல் இருப்பதால் பற்களின் குழிக்குள் கிருமிகள் தங்கி பல் சொத்தை ஏற்படுகிறது. பாதிக்கப்பட்டபற்களை சுத்தம் செய்து விட்டு நிரந்தரமாக ஒட்டையை அடைக்கலாம். சொத்தை ஆழமாக இருந்தால் வேர் சிகிச்சை செய்யலாம். பல்லை அகற்றுதல் என்பது பாதிப்பின் தன்மையை பொருத்தது.பல் கட்டுதல்பல் விழுந்துவிட்டால் அல்லது அகற்றினால் கண்டிப்பாக பல் கட்ட வேண்டும். இல்லாவிட்டால்அருகில் உள்ள பற்கள் காலியாக உள்ள இடத்திற்கு பக்கவாட்டில் வளரும்.இதனால் பற்களின் சிரத்தன்மை குறைந்து சாப்பிடுவதில் சிரமம் ஏற்படும். தாடை பக்காவட்டு எலும்பில் வலி ஏற்படும். இதற்கு தீர்வு 'மிக்ஸ்டு பிரிட்ஜ்' முறையில் பல் கட்டுவது தற்போதைய நடைமுறை. பல் இல்லாத பகுதியில் எலும்பில் துளை போட்டு டைட்டானியம் இம்பிளாண்ட் முறையில் பல் கட்ட முடியும்.
பல் சீரமைப்பு6 முதல் 13 வயது வரையுள்ள குழந்தைகளின் பிரச்னைகளான விரல் சூப்புதல், நாக்கை துருத்தல், உதட்டை கடித்தல், நகம் கடித்தல் போன்ற செயல்களால் அவர்களின் பற்களின் சீரமைபபில் மாறுதல் ஏற்படுகிறது. இதனை ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டும். பல் உடைந்து கூர்மையான பற்கள் சதைகளில் குத்தி ஏற்படும் காயத்தை பொருட்படுத்தாமல் விட்டால் புற்றுநோயாக மாறும் வாய்ப்புள்ளது. புகையிலை பயன்படுத்துவதாலும் புற்றுநோய் ஏற்படும். இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். சிகிச்சை மற்றும் ஆலோசனைக்கு 97865 20696