ADDED : டிச 31, 2024 06:50 AM

நடை, ஓட்டம், விளையாட்டு, உடற்பயிற்சியால்
நோய்களை விரட்டலாம்
-அடிக்கடி தலைசுற்றல் வந்தால் ரத்த அழுத்தம் காரணமாக இருக்கலாம். சர்க்கரை நோய் இருந்தால் ரத்த அழுத்தம் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு முதலில் உடற்பயிற்சி, இரண்டாவது உணவு, அடுத்து மருந்து மூலம் கட்டுப்படுத்தலாம். சுய மருத்துவம் செய்து உங்கள் உடலுக்கு நீங்களே தீங்கு செய்ய வேண்டாம்.
காய்ச்சல்: திறந்தவெளியில் தேங்கிய சுத்தமான தண்ணீர், தேவையில்லாத பொருட்களில் தேங்கும் மழை நீரில் ஏ.டி.எஸ்., கொசு உற்பத்தியாகி கடிப்பதால் காய்ச்சல், உடல் வலி, வாந்தி, வயிற்றுவலி, தலைவலி ஏற்படும். இவை டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி. இவற்றை தொடர் சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.நோயாளிகளை குடும்பத்தில் ஒருவராக பார்ப்பதால் விரைவில் சிகிச்சை பெற்று வீடு திரும்புகின்றனர். தினமும் நடை பயிற்சி, ஓட்டம், விளையாட்டு போன்ற உடற்பயிற்சியால் நோய்களை விரட்டலாம் என்றார்.
டாக்டர் சி.செல்வராஜ் ,
சங்கர் கிளினிக், வைகை அணை ரோடு, வடுக பட்டி.
அலைபேசி: 98947 31539
--