நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அறிவுத் திருக்கோயிலில் சர்வதேச தியான விழா திண்டுக்கல் மண்டல தலைவர் தாமோதரன் தலைமையில் நடந்தது. நிர்வாக அறங்காவலர் சிவராமன், செயலாளர் சங்கிலிக்காளை முன்னிலை வகித்தனர். விழாவில் மனவளக்கலை ஆசிரியர் புத்தாக்க பயிற்சி நடந்தது.
திருவாரூர் மத்திய பல்கலை, ஆழியார் விஷன்பார் விஸ்டம் சார்பில், 'யோகமும் மனித மாண்பும்' குறித்த முதுகலை படிப்பின் முதலாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. மாணவர்களுக்கு தியானம் குறித்த புத்தகமும், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், பட்டம் பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

