நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அரசு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. வாரிய தலைவர் ஜீவா தலைமை வகித்தார். பொதுமேலாளர் துரைமுருகன் முன்னிலைவகித்தார். மாநிலம் முழுவதும் இம்மாதம் 25லட்சம் இணைப்புகள் வழங்க இலக்கு வைத்து, ஆப்பரேட்டர்கள் அரசு கேபிள் டிவி ஒளிபரப்புவதை உறுதி செய்ய வேண்டும்.
மாவட்டத்தில் இலக்கை எட்ட தவறிய ஆப்பரேட்டர்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் கேபிள் டி.வி., தாசில்தார் சுகந்தா, துணை மேலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

