/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மேகமலை மின் பாதை மாற்ற திட்டம் 6 கி.மீ.,க்கு தரைவழி கேபிள் பதிக்க ஆய்வு தடையில்லா மின்சாரம் வழங்க புதிய முயற்சி

ADDED : டிச 12, 2025 06:22 AM
கம்பம், டிச. 12--
மேகமலை பகுதிகளுக்கு செல்லும் மின் ஒயர்களை மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
மேகமலை பகுதியில் ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணி யாறு, இரவங்கலாறு , மகாராஜா மெட்டு, தூவானம் உள்ளிட்ட பகுதிகளில் தேயிலை தோட்ட தொழிலாளர்களும், தனியார் எஸ்டேட் தொழிலாளர்களும் வசித்து வருகின்றனர்.
சுமார் 2 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. இங்குள்ள தனியார் தேயிலை எஸ்டேட் நிர்வாகத்திற்கு மட்டும் 900 இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கு மின்சாரம் வண்ணாத்திபாறை துணை மின் நிலையத்திலிருந்து கொண்டு செல்லப்படுகிறது. மொத்தம் 32 கி.மீ. தூரம் உள்ள இந்த மின் வழித்தடத்தில், 6 கி.மீ. தூரம் அடர்ந்த வனப்பகுதி வழியாக மின் ஒயர்கள் செல்கிறது. அடிக்கடி மரக்கிளைகள் விழுவதாலும், யானை போன்ற வன உயிரினங்களாலும், ஒயர்கள் சேதமடைந்து மின் சப்ளை தடங்கலாகிறது. குறிப்பாக மழை காலங்களிலும், காற்று வீசும் காலங்களிலும் மின் சப்ளை துண்டிக்கப்படுவது வழக்கமாகி வருகிறது . மின் சப்ளையை சரிசெய்ய வனப்பகுதிக்குள் சென்று பார்க்க வேண்டும். அடர்ந்த வனப்பகுதி மற்றும் ஆபத்து மிகுந்த வன உயிரினங்கள் வசிக்கும் பகுதியாகும்.
எனவே இந்த 6 கி.மீ. தூரத்திற்கு மட்டும் அதாவது வண்ணாத்தி பாறையில் இருந்து இரவங்கலாறு வரை, பெண்ட் ஸ்டாக் (மின் நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வர அமைக்கப்பட்டுள்ள குழாய்) பக்கவாட்டில் ஆங்கிள் அமைத்து மின் ஒயர்களை கொண்டு செல்ல மின்வாரியம் ஆய்வு செய்தது. ஆனால் இதற்கு சுருளியாறு நீர்மின்நிலைய அதிகாரிகள் அனுமதி தரவில்லை.
இதற்கு காரணம் மின்சாரமும், தண்ணீரும் நேர் எதிர் குணம் கொண்டது. எனவே அது சாத்தியம் இல்லை என்று மின் நிலைய அதிகாரிகள் கூறிவிட்டதாக தெரிகிறது. எனவே இந்த 6 கி.மீ. தூரத்திற்கு மட்டும் அண்டர் கிரவுண்ட் கேபிள் பதிக்கலமா என்று ஆய்வு செய்ய வாரியம் முடிவு செய்துள்ளது. மலைப் பிரதேசமாக இருப்பதால் தடையில்லா மின்சாரம் வழங்க அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.