/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்ட கிரிக்கெட் போட்டி மேனகா மில்ஸ் அணி வெற்றி
/
மாவட்ட கிரிக்கெட் போட்டி மேனகா மில்ஸ் அணி வெற்றி
ADDED : அக் 05, 2025 05:11 AM
தேனி : தேனி மாவட்ட கிரிக்கெட் போட்டியில் மேனகா மில்ஸ் அணி வெற்றி பெற்றது.
தேனி மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில லீக் போட்டிகள் நடந்து வருகிறது. சின்னமனுார் விகாஷா பள்ளி மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் மேனகா மில்ஸ், ஜாக்கி ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த மேனகா மில்ஸ் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் எடுத்தது.சுபாஷ் நந்தா 110, துரை 49 ரன்கள் எடுத்தனர். தமிழ் 5 விக்கெட் வீழ்த்தினார். சேசிங் செய்த ஜாக்கி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. மேனகா மில்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மறுநாள் நடந்த போட்டியில் மேனகா மில்ஸ் அணி, கே.ஆர்.சி.சி., அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த கே.ஆர்.சி.சி., அணி 24.1 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் எடுத்தது. சிவக்குமார் 36 ரன்கள் எடுத்தார்.
தமிழ்செல்வன் 4 விக்கெட் வீழ்த்தினார். சேசிங் செய்த மேனகா மில்ஸ் அணி 18 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சுபாஷ்நந்தா, துரை தலா 26 ரன்கள் எடுத்தனர்.