ADDED : ஜன 10, 2026 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம்: மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பிற்கு பின் என்ன படிப்பு படிக்கலாம் என்ற வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தினர்.
இதில் மாணவிகள் இனியா, தேவிகா, ப்ரித்திகா, பத்மாவதி, பூஜா, பூங்கோதை , பூவிதா, பிரவிஹா, ப்ரித்தி, கோதை, பிரியதர்ஷினி ஆகியோர் பங்கேற்று மாணவர்களுக்கு பள்ளி கல்விக்கு பின் என்ன மேல் படிப்பு படிக்கலாம் என்று ஆலோசனை வழங்கினார்கள்.
பள்ளி தலைமையாசிரியை பிரியதர்ஷினி ஏற்பாடுசெய்தார்.

