ADDED : செப் 02, 2026 06:53 PM
அ நிறம் | அளவு
போடி, செப்.
3 -
போடி அரசு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுகம் மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி முதல்வர் சுஜாதா பலராமன் தலைமையில் நடந்தது. பேராசிரியர்கள் உமா மகேஸ்வரி, பெரியசாமி முன்னிலை வகித்தனர். விழாவில் மாணவர்கள் கிடைக்கும் வேலை வாய்ப்புகள், விடுதிகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், கல்வி உதவித்தொகை பெறும் விபரம், மாணவர்கள், பெற்றோர்களின் பங்களிப்பு குறித்த தகவல்களை பேராசிரியர்கள் விளக்கினர். பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
