/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆசிரியர்களுக்கு வழிகாட்டி பயிற்சி
/
ஆசிரியர்களுக்கு வழிகாட்டி பயிற்சி
ADDED : நவ 21, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: அரசுப்பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகள் பள்ளி அளவில் நடத்தப்பட உள்ளது.
இதற்காக மாவட்டத்திற்கு தலா 5 பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு உயர்கல்வி தொடர்பான இணைய வழி பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கியது. தேனி சி.இ.ஓ., அலுவலகத்தில் நடந்த பயிற்சியில் 15 பேர் பங்கேற்றனர். பயிற்சி பெறுபவர்கள் வட்டாரம் வாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவார்கள். அவர்கள் மூலம் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகள் பள்ளிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

