/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வசூலித்தால் மட்டும் போதாது: வசதிகள் செய்து தர வேண்டும் தேனி வாரசந்தை வியாபாரிகள் குமுறல்

ADDED : டிச 14, 2025 06:06 AM
தேனி: தேனி வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள், வியாபாரிகள் அவதியடைகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேனியில் பெரியகுளம் ரோட்டில் கவுமாரியம்மன் கோவில் வளாகத்தில் வாரசந்தை சனிதோறும் நடக்கிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் கடைகள் அமைக்கின்றனர். காய்கறி, பழங்கள், மளிகை பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கும். இதனால் சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள் சந்தைக்கு அதிகம் வருகின்றனர். நகராட்சி சார்பில் கடைகளில் கட்டணம் வசூலிக்க டெண்டர் விடப்பட்டுள்ளது.
மழைகாலங்களில் சந்தை முழுவதும் சகதி காடாக மாறிவிடும். பொதுமக்கள் சகதியில் வழுக்கி விழுவதும், தற்காலிகமாக சகதியை மூட வியாபாரிகள் காய்கறி கழிவுகளை கொட்டி வைக்கும் அவல நிலை தொடர்கிறது. கழிப்பறை வசதி இல்லாததால் வியாபாரிகள் அப்பகுதியில் திறந்த வெளி, ரயில்வே ஸ்டேஷன் ரோட்டை பயன்படுத்துகின்றனர்.
வியாபாரிகள் கூறுகையில், நகராட்சி சார்பில் வாரந்தோறும் ஒருகடைக்கு ரூ.200 வரை வசூலிக்கப்படுகிறது. ஆனால், வசதிகள் செய்து தர முனைப்பு காட்டுவதில்லை. மழைகாலத்தில் பலரும் சகதியில் வழுக்கி விழுகின்றனர். அடிப்படை வசதிகள் இல்லாததால் பலரும் திறந்த வெளியை பயன்படுத்துகின்றனர்.
இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். மழைநீர் தேங்காதவாறும், நடவடிக்கை எடுக்கவும், கழிப்பறை வசதி செய்திட வேண்டும் என்றனர்.