ADDED : டிச 05, 2025 07:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, எஸ்.ஐ.,தேவராஜ் தலைமையிலான போலீசார் நேற்று மாலை கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் கம்பம் பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர்.
அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த கம்பம் மந்தையம்மன் கோயில் தெரு பிரசாத் 33, என்பவரை சோதனை செய்தனர். அவரிடம் ரூ.88 ஆயிரம் மதிப்புள்ள 22 கிராம் எடையிலான போதைப்பவுடரான மெத்தபெட்டமைன் பிளாஸ்டிக் கவரிலும், ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள 120 கிராம் கஞ்சாவும் இருந்தன. இவற்றை பறிமுதல் செய்த போலீசார் பிரசாத்தை கைது செய்தனர். அவருக்கு கஞ்சா சப்ளை செய்யும், திருச்சியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் மெத்த பெட்டமைன் சப்ளை செய்யும், விற்பனை செய்ய கூறும் நபர் என இருவர் குறித்து விசாரிக்கின்றனர்.

