ADDED : டிச 19, 2025 05:34 AM
தேனி: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தேனி மாவட்ட பேரவைக் கூட்டம் சில்லமரத்துப்பட்டி பால்பண்ணையில் நடந்தது.
மாநிலபொதுச் செயலாளர் பெருமாள் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் செல்வராஜ், செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் கிருஷ்ணன், தேனி மாவட்ட விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கண்ணன், மாவட்டத் தலைவர் பாண்டியன், மாநிலக்குழு உறுப்பினர் ராஜப்பன், பண்ணைப்புரம் பேரூராட்சி துணைத் தலைவர் சுருளிவேல் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். நிர்வாகி பார்த்தீபன் நன்றி தெரிவித்தார்.
தவிடு, பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, கலப்பு தீவனங்கள், கால்நடைகள் விலை உயர்ந்துள்ள நிலையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி லிட்டர் ஒன்றுக்கு பசும்பாலுக்கு ரூ.45ம், எருமை பாலுக்கு ரூ.60ம் உயர்த்தி அறிவிக்க வேண்டும்.
ஊக்கத்தொகையாக லிட்டருக்கு ரூ.3 வழங்குவதை ரூ.10 என உயர்த்தி வழங்க வேண்டும். 50 சதவீத மானிய விலையில் தரமான கலப்பிடம் இல்லாத கலப்பு தீவனம் அரசு வழங்கிட வேண்டும்.
சத்துணவு திட்டத்தில் பால் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
