/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மினி ஸ்டேடியம் இடத்தேர்வு தீவிரம்
/
மினி ஸ்டேடியம் இடத்தேர்வு தீவிரம்
ADDED : டிச 17, 2025 05:44 AM
தேனி: ஆண்டிபட்டி தொகுதி மரிக்குண்டு பகுதியில் மினி ஸ்டேடியம் அமைக்க இடத்தேர்வு நடந்து வருவதாக விளையாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி மாவட்டத்தில் பெரியகுளம் தொகுதிக்குட்பட்டபகுதியில் மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது.
கம்பம் தொகுதி, கோம்பையில் ரூ.3 கோடி மதிப்பில் தடகளம், கபடி, கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான மைதானங்கள், அடிப்படை வசதிகளுடன் மினி ஸ்டேடியம் அமைக்கும் பணி துவங்கி உள்ளது. விளையாட்டுத்துறையினர் கூறுகையில், 'ஆண்டிபட்டி, போடி தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
ஆண்டிபட்டி மரிக்குண்டு பகுதியில் சுமார் 5 ஏக்கர் நிலம் பார்வையிடப்பட்டுள்ளது. போடி தொகுதியில் இடம் தேர்வாகவில்லை. பிறதுறை அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறோம்,' என்றனர்.

