ADDED : மார் 30, 2026 11:54 PM
அ நிறம் | அளவு
தேனி: மாயமான தாய் மற்றும் இரு மகள்களின் உடல்கள், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டன.
தேனி மாவட்டம், டொம்புச்சேரியை சேர்ந்தவர் பாப்பாத்தி, 30. இவரது கணவர் பிரசாந்த். இவர்கள் மகள்கள் அருணா, 8, சங்கீதா, 5. பாப்பாத்திக்கு சில ஆண்டுகளாக மனநல பாதிப்பு இருந்தது. மார்ச், 28ல் இரு குழந்தைகளுடன் மாயமானார்.
டொம்புச்சேரி பகுதியில் உள்ள கிணற்றில், பாப்பாத்தி, அருணா, சங்கீதா உடல் மிதப்பதாக நேற்று தகவல் கிடைத்தது. பழனிசெட்டிப்பட்டி போலீசார், மூவரின் உடல்களை மீட்டு விசாரிக்கின்றனர்.
