ADDED : அக் 20, 2026 07:56 PM

மூணாறு: மூணாறில் முதன்முதலாக எம்.எல்.ஏ.வுக்கு என தனி அலுவலகம் திறக்கப்பட்டது.
தேவிகுளம் தொகுதியில் தமிழர்கள் தொடர்ந்து எம்.எல். ஏ., வாக இருந்து வருகின்றனர். தற்போது காங்கிரசை சேர்ந்த ராஜா எம்.எல்.ஏ., வாக உள்ளார். இது வரை மூணாறில் எம்.எல்.ஏ.வுக்கு என தனியாக அலுவலகம் செயல்படவில்லை. கட்சி சார்பிலான தொழிற்சங்க அலுவலகங்களில் எம்.எல். ஏ., அலுவலகங்கள் செயல்பட்டன.
இந்நிலையில் மூணாறில் முதன்முதலாக எம். எல். ஏ., ராஜாவுக்கு தனி அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது. நகரில் ஜி.எச்., ரோட்டில் ஐ.என்.டி.யு.சி., அலுவலகத்தின் மேல் தளத்தில் உள்ள புதிய அலுவலகத்தின் திறப்பு விழாவுக்கு காங்., ஒன்றிய தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., மணி திறந்து வைத்தார். திருவனந்தபுரம் காட்டாக்கடா எம்.எல்.ஏ., பைஜூ, காங்., மாநில பொது செயலாளர் இப்ராஹிம்குட்டி கல்லார், மாவட்ட பொது செயலாளர் முனியாண்டி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நெல்சன், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ராஜாராம், ஐ. என்.டி.யு.சி. வட்டார தலைவர் குமார், இந்திய கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர்கள் முத்துபாண்டி, மோகன்குமார், வர்த்தக சங்க தலைவர் பாபுலால் உள்பட பலர் பங்கேற்றனர். எம்.எல்.வு., க்கு என தனி அலுவலகம் திறக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
