ADDED : செப் 29, 2026 07:14 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.30–
மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் உள்ளன.
அவற்றை வளர்ப்போர், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட அலைபேசியை கால்நடை துறையில் பதிவு செய்ய வேண்டும் என கால்நடை துறை மண்டல இணை இயக்குனர் கிரிஜா தெரிவித்தார். அவர் கூறியதாவது: என்.டி.எல்.எம்., என்ற டிஜிட்டல் கால்நடை இயக்க இணையதளத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடைகளையும் உரிமையாளர்கள் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்பவர்களுக்கு நிதி உதவி, கணக்கெடுப்பு, தடுப்பூசி உள்ளிட்டவை பெற உதவியாக இருக்கும். ஆதாருடன் இணைத்த அலைபேசியை அருகில் உள்ள கால்நடை துறை பராமரிப்பு அலுவலகத்திற்கு சென்று விவசாயிகள் அக்.10 க்குள் பதிவு செய்ய வேண்டும் என்றார்.
