ADDED : ஜன 22, 2026 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கோவிந்தராவ் பெரியகுளம் தாலுகா மேல்மங்கலம் ஊராட்சி, தாமரைக்குளம் பேரூராட்சியில் நடைபெறும் ரோடு பணி, தேனி நகராட்சிக பகுதியில் நடைபெறும் பாதாளசாக்கடை விரிவாக்க பணிகளை ஆய்வு செய்தார்.
ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் கண்காணிப்பு அலுவலர் தலைமையில் வாக்காளர்பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கலெக்டர் ரஞ்ஜீத்சிங் முன்னிலை வகித்தார். பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன், திட்ட இயக்குநர்கள் தமிழரசி(ஊரக வளர்ச்சி), சந்திரா (மகளிர்திட்டம்), ஆண்டிபட்டி தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் கவிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

