/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மின்சாரம் பாய்ந்து தாய், மகள் காயம்
/
மின்சாரம் பாய்ந்து தாய், மகள் காயம்
ADDED : டிச 06, 2025 09:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் பார்வதி தியேட்டர் அருகே 'டீ கப்' டீ கடை நடத்தி வருபவர் தாரிக் 36. மேல்தளத்தில் குடியிருந்து வருகிறார். இவரது மனைவி ஹரினா 30. துணிகளை துவைத்து கொடிகம்பியில் காய போட்டுள்ளார்.
உயர்மின் கம்பியில் எதிர்பாராத விதமாக துணி விழுந்தது. அதனை எடுக்க முயன்ற ஹரினா மீதும், அருகில் நின்று கொண்டிருந்த இவரது மகள் தீன்கிபா 9, மீதும் உயர் மின் அழுத்த மின்சாரம் பாய்ந்தது. இருவரும் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.

