ADDED : நவ 19, 2025 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம் 40, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த தனது உறவினரை பார்த்துவிட்டு, மகன் அசோக் 21, ஓட்டிச் சென்ற டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றார்.
வைகைபுதூர் இரட்டை பாலம் அருகே முன்னால் சென்ற கார் எவ்வித சிக்னலும் செய்யாமல் டிரைவர் திருப்பி உள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் காருடன் மோதியது.
இந்த விபத்தில் பஞ்சவர்ணம், அசோக் இருவரும் காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். கார் டிரைவர் சென்றாயனிடம் வைகை அணை போலீசார் விசாரிக்கின்றனர்.

