/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நுாலகம் வைத்திருப்போர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
/
நுாலகம் வைத்திருப்போர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
நுாலகம் வைத்திருப்போர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
நுாலகம் வைத்திருப்போர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : பிப் 10, 2025 05:08 AM
தேனி: 'மாவட்டத்தில் சொந்த நுாலகங்களுக்கான விருது பெற பிப்.20க்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம்' என, கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: தமிழக அரசு வீடு தோறும் நுாலகங்கள் அமைக்க வேணடும் என்ற நோக்கத்தில் மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகிறது. சொந்த வீடுகளில் நுாலகங்கள்அமைந்து சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து, சொந்த நுாலங்களுக்கான விருது வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தேனி மாவட்டத்தில் வீடுகளில் நுாலகம் அமைத்து வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தி வரும் தீவிர வாசகர்களின் சொந்த நுாலகங்களுக்கான விருது பெற dlothn@1997gmail.com என்ற மின்னஞ்சலில் பிப்.20க்குள் விண்ணப்பிக்கலாம். அதன் பின் மாவட்ட நுாலக அலுவலர் தலைமையில் குழு அமைத்து, தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நுாலகங்களை நேரில் ஆய்வு செய்து, குழுவின் பரிசீலனைக்கு உட்பட்டு, மாவட்ட அளவில்சிறப்பாக பராமரிக்கப்படும் தனிநபர் இல்ல நுாலகம் ஒன்று தேர்ந்தெடுக்கப்படும். அவ்வாறு தேர்வான நுாலகத்தின் உரிமையாளருக்கு புத்தக திருவிழாவில் ரூ.3 ஆயிரம் மதிப்பில் கேடயம், சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படுவார். எனவே இந்த நல்வாய்ப்பினை சொந்த நுாலகங்கள் வைத்துள்ளோர் பயன் படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

