/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சாக்கடை துார்வாரும் பணியை பாதியில் நிறுத்திய நகராட்சி நிர்வாகம் கமிஷனர், அதிகாரிகள் அலட்சியம்

ADDED : செப் 08, 2025 06:20 AM

தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சி பழைய போஸ்ட் ஆபீஸ் ஓடைத் தெருவில் நகராட்சி சார்பில் சாக்கடையை துார்வாராமல், ரோட்டை தோண்டி 14 நாட்களுக்கு மேல் சீரமைக்காமல் உள்ளனர். நகராட்சி அதிகாரிகள் மவுனம் காப்பதால் அப்பகுதியில் குடியிருப்போர், அவ்வழியாக வாகனங்களில் செல்வோர் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர்.
இந்நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் 18வது வார்டில் பழைய போஸ்ட் ஆபிஸ் ஓடைத்தெரு உள்ளது. இதில் பூ மாரியம்மன் கோயில் எதிரே கழிவு நீர் சாக்கடை உள்ளது. இந்த சாக்கடையில் பல பகுதிகளில் இருந்து அடித்து வரப்படும் மணல் அதிகம் சேர்ந்துள்ளது. பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். ஆனால், தற்போது மீண்டும் மணல் நிரம்பியது.
இதனால் அப்பகுதியில் சாக்கடை கழிவுநீர் செல்ல வழியின்றி தெருக்களில் குளம் போல் தேங்குகிறது. கசடுகளுடன் தேங்குவதை தவிர்க்க இருவாரங்களுக்கு முன் நகராட்சி பொறியியல் பிரிவினர் ரோட்டினை பாதி துாரத்திற்கு தோண்டி கழிவு நீர் செல்ல வழி செய்தனர். அதோடு அந்த பணியை மறந்து சென்றனர். தற்போது வாகனங்கள் நடந்து செல்பவர்கள் அவ்வழியாக செல்ல முடியவில்லை. விபத்துக்களும் தொடர்கின்றன. அப்பகுதியில் சாக்கடையில் சேர்ந்துள்ள மணலை அகற்ற வேண்டும் என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகாரிகள் அசட்டை இதுகுறித்து அலைபேசியில் நகராட்சி கமிஷனர் சங்கர், உதவி பொறியாளர் முருகன் ஆகியோரை தொடர்பு கொண்ட போது பதில் அளிக்கவில்லை.