UPDATED : செப் 08, 2026 05:53 PM
ADDED : செப் 08, 2026 05:32 PM
தேனி:தேனி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடியிருப்பாக இருந்து வணிக கட்டடங்களாக மாறியவற்றிற்கு சொத்து வரி வகை மாற்றம் செய்யும் பணி துவங்கி உள்ளது.
தேனியில் அல்லிநகரம், பெரியகுளம் ரோடு, மதுரை ரோடு, சுப்பன்செட்டி தெரு உள்ளிட்டவைநகராட்சி பகுதியில் உள்ளன. இதில் பல பகுதிகளில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்புவரை ரோட்டோர பகுதிகள் பொதுமக்கள் குடியிருப்பாக இருந்து வந்தன. இந்நிலையில் நகர் மயமாதல், புதிய பஸ் ஸ்டாண்ட் அமைந்தது உள்ளிட்ட காரணங்களால் குடியிருப்புகள் வணிக நிறுவனங்கள், கடைகளாக மாற்றம் செய்யப்பட்டன. ஆனால், நகராட்சி சொத்து வரி விதிப்பில் இன்றளவும் குடியிருப்பிருப்பிற்கான வரி மட்டும் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் வணிக நிறுவனங்களாக மாறிய சொத்து வரிகளை கண்டறிந்து வகை மாற்றம் செய்யும் பணியை நகராட்சி அதிகாரிகள் துவங்கி உள்ளனர்.
