/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேனி பஸ் ஸ்டாண்டில் கிடப்பில் போடப்பட்ட இணைப்பு ரோடு ஒப்பந்ததாரருக்கு நகராட்சி நோட்டீஸ்
/
தேனி பஸ் ஸ்டாண்டில் கிடப்பில் போடப்பட்ட இணைப்பு ரோடு ஒப்பந்ததாரருக்கு நகராட்சி நோட்டீஸ்
தேனி பஸ் ஸ்டாண்டில் கிடப்பில் போடப்பட்ட இணைப்பு ரோடு ஒப்பந்ததாரருக்கு நகராட்சி நோட்டீஸ்
தேனி பஸ் ஸ்டாண்டில் கிடப்பில் போடப்பட்ட இணைப்பு ரோடு ஒப்பந்ததாரருக்கு நகராட்சி நோட்டீஸ்
ADDED : டிச 14, 2025 06:00 AM
தேனி: தேனி கர்னல் ஜான்பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் ஏலம் எடுக்கப்பட்டுபணியை பாதியில் விட்டு சென்ற ஒப்பந்த தாரருக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
தேனி கர்னல் ஜான்பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் 3 பிளாட்பாரங்கள் உள்ளன. இதில் முதல் இரு பிளாட்பாரங்களில் போடி, மதுரை, சென்னை, பெங்களூரு, மூணாறு, திருநெல்வேலி, திண்டுக்கல் செல்லும் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இந்த பிளாட்பாரங்களுக்கு மேற்கு நுழைவாயில் வழியாக செல்கின்றன. மூன்றாவது பிளாட்பாரத்தில் டவுன்பஸ்கள், கோவை,திருப்பூர் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன.இந்த பஸ்கள் வடக்கு புற நுழைவாயில் வழியாக உள்ளே சென்று, வெளியே வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது.
இதனால் பஸ் ஸ்டாண்ட் வழியாக கலெக்டர் அலுவலகம் செல்வோர், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் மூன்றாவது பிளாட்பாரத்திற்கு செல்லும் பஸ்களும் மேற்கு நுழைவாயில் வழியாக செல்லும் வகையில் திட்டமிடப்பட்டது. நகராட்சி மூலம் பஸ் ஸ்டாண்ட் பிளாட்பாரங்களில் சேதமடைந்த பிளாஸ்டிக் மேற்கூரைகள் சீரமைத்தல், 3வது பிளாட்பாரத்திற்கு இணைப்பு ரோடு அமைக்கும் பணிக்கு ரூ.1.82 கோடியில் டெண்டர் விடப்பட்டது.
நகராட்சி நோட்டீஸ் கான்ட்ராக்டர் டெண்டர் எடுத்தார். பிளாட்பாரங்களில் உள்ள பிளாஸ்டிக் கூரைகள் சில மாதங்களுக்கு முன் சீரமைக்கப்பட்டன. அதன்பின் இணைப்பு ரோடு அமைக்கும் பணி இதுவரை துவங்க வில்லை. இதுபற்றி நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, ஒப்பந்ததாரர் பணியை கிடப்பில் போட்டுள்ளார். விளக்கம் கேட்டும், பணியை விரைந்து முடிக்க கோரியும் நோட்டீஸ் வினியோகித்துள்ளதாக தெரிவித்தனர்.
இரு ஆண்டுகளுக்கு முன் பிளாட்பாரங்களில் சேதமடைந்திருந்த பிளாஸ்டிக் கூரைகள் சீரமைக்க டெண்டர் விடப்பட்டிருந்தது. அப்போதும், முதல் பிளாட்பாரம் மட்டும் கூரை சீரமைக்கப்பட்டது.
மற்ற பிளாட்பாராங்களில் பணிகள் மேற்கொள்ளாமல் முடங்கியது குறிப்பிடதக்கது.

