/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூணாறு - திருவனந்தபுரம் கோழிக்கோடு பஸ்கள் இயக்கம்
/
மூணாறு - திருவனந்தபுரம் கோழிக்கோடு பஸ்கள் இயக்கம்
மூணாறு - திருவனந்தபுரம் கோழிக்கோடு பஸ்கள் இயக்கம்
மூணாறு - திருவனந்தபுரம் கோழிக்கோடு பஸ்கள் இயக்கம்
ADDED : பிப் 05, 2026 06:05 AM
மூணாறு: மூணாறில் இருந்து தொலை தூரத்தில் உள்ள திருவனந்தபுரம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளுக்கு கேரளா அரசு பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூணாறில், பழைய மூணாறில் உள்ள கேரளா அரசு பஸ் டிப்போவில் இருந்து கேரளாவில் பல்வேறு பகுதிகளுக்கும், தமிழகத்தில் தேனி, உடுமலைபேட்டை, கர்நாடகா மாநிலத்தில் பெங்களுரூ ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தற்போது மூணாறில் இருந்து தொலை தூரத்தில் உள்ள திருவனந்தபுரம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளுக்கு 'சூப்பர் பாஸ்ட்' பஸ்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்: மூணாறில் இருந்து தினமும் அதிகாலை 3:00 மணிக்கு புறப்பட்டு கோட்டயம் வழியாக காலை 10:20 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். அங்கிருந்து மதியம் 3:00 மணிக்கு புறப்பட்டு இரவு 10:30 மணிக்கு மூணாறு வந்து சேரும்.
கோழிக்கோடு: மூணாறில் இருந்து தினமும் காலை 8: 20 மணிக்கு புறப்பட்டு மதியம் 3:30 மணிக்கு கோழிக்கோடு சென்றடையும். அங்கிருந்து இரவு 9:30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4:30 மணிக்கு மூணாறுக்கு வந்து சேரும்.
இரண்டு பஸ் போக்குவரத்தும் விரைவில் துவங்கும் என டிப்போ அதிகாரிகள் தெரிவித்தனர்.

