/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஐந்து நாட்களில் ரூ.37 லட்சம் வருவாய் மூணாறு அரசு பஸ் டிப்போ அசத்தல்
/
ஐந்து நாட்களில் ரூ.37 லட்சம் வருவாய் மூணாறு அரசு பஸ் டிப்போ அசத்தல்
ஐந்து நாட்களில் ரூ.37 லட்சம் வருவாய் மூணாறு அரசு பஸ் டிப்போ அசத்தல்
ஐந்து நாட்களில் ரூ.37 லட்சம் வருவாய் மூணாறு அரசு பஸ் டிப்போ அசத்தல்
ADDED : டிச 31, 2025 05:38 AM
மூணாறு: மூணாறில் கேரள அரசு பஸ் டிப்போவில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் பெட்ரோல், டீசல் வினியோகம், பஸ் கட்டணம் ஆகியவற்றின் மூலம் வருவாய் அதிகரித்து சாதனை ஏற்படுத்தியது.
பழைய மூணாறில் உள்ள அரசு பஸ் டிப்போவில் இருந்து பெங்களூரு, தேனி, உடுமலைபேட்டை உள்பட 28 சர்வீஸ்கள் இயக்கப்படுகின்றன. அதன் மூலம் தினமும் சராசரி வருவாய் ரூ.4.5 லட்சம் இருந்தது. அது கிறிஸ்துமஸ் விடுமுறையில் அதிகரித்தது. டிச.24 முதல் டிச.28 வரை ஐந்து நாட்களில் ரூ.37.01 லட்சம் வருவாய் கிடைத்தது. கூடுதலாக டிச.24ல் 8.35 லட்சம் வருவாய் கிடைத்தது. குறிப்பாக தேனி, உடுமலைபேட்டை, திருவனந்தபுரம், பெங்களூரு பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் மூலம் அதிக வருவாய் கிடைத்தது.
பெட்ரோல் பங்க்: டிப்போவில் 24 மணி நேரம் செயல்படும் வகையிலான பெட்ரோல் பங்க்கில் அனைவரும் எரிபொருள் நிரப்புவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் பெட்ரோல் பங்க்கில் எரிபொருள் விற்பனை அதிகரித்தது. கிறிஸ்துமஸ் நாளில் ரூ.17 லட்சம், டிச.26ல் ரூ.16 லட்சம், டிச.27ல் ரூ.18.5 லட்சம், டிச.28ல் ரூ.17.2 லட்சம் வருவாய் கிடைத்து சாதனை ஏற்படுத்தியது.

