ADDED : செப் 04, 2026 07:01 PM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி, செப். 5 -
ஆண்டிபட்டி தெப்பம்பட்டி ரோட்டில் பேரூராட்சியின் முத்தமிழ் பூங்கா பராமரிப்பின்றிபொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இப் பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், பூங்காவிற்கு வந்து செல்வோர் அமரும் இருக்கைகள் இருந்தன. பூங்காவில் தொடர் பராமரிப்பு இல்லாததால் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. பகல், இரவில் மது அருந்துவோர் புகைப்போர் அதிகம் ஆக்கிரமிப்பதால் பெண்கள், குழந்தைகள், முதியோர் பூங்காவிற்கு வருவதை தவிர்த்து விட்டனர். பேரூராட்சி நிர்வாகம் பூங்கா பராமரிப்புக்கு தனியாக பணியாளர் நியமித்து பூங்காவிற்கான சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
