ADDED : செப் 06, 2026 01:29 AM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி தெப்பம்பட்டி ரோட்டில் பேரூராட்சியின் முத்தமிழ் பூங்கா பராமரிப்பின்றிபொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் உள்ளது. இப் பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், பூங்காவிற்கு வந்து செல்வோர் அமரும் இருக்கைகள் இருந்தன.
தொடர் பராமரிப்பு இல்லாததால் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. மது அருந்துவோர் புகைப்போர் அதிகம் ஆக்கிரமிப்பதால் பெண்கள், குழந்தைகள், முதியோர் பூங்காவிற்கு வருவதை தவிர்த்து விட்டனர். பூங்கா பராமரிப்புக்கு தனியாக பணியாளர் நியமித்து பூங்காவிற்கான சூழலை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
