/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ராமநாதபுரத்திற்கு முத்திரை தாள்கள் அனுப்பிவைப்பு
/
ராமநாதபுரத்திற்கு முத்திரை தாள்கள் அனுப்பிவைப்பு
ADDED : ஆக 21, 2025 08:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : மாவட்ட கருவூலத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முத்திரை தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.கருவூலத்துறை அலுவலர்கள் கூறியதாவது:
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.ஆயிரம், ரூ. 5 ஆயிரம் மதிப்பிலான முத்திரை தாள்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதனால் தேனி மாவட்ட கருவூலத்தில் இருந்து ராமநாதபுரம் கருவூலத்திற்கு முத்திரை தாள்கள் அனுப்ப உத்தரவிடப்பட்டது.
சுமார் 15 லட்சம் மதிப்பிலான ரூ.5 ஆயிரம், ரூ.ஆயிரம் மதிப்பிலான முத்திரை தாள்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேனி மாவட்டத்தில் முத்திரை தாள்கள் பற்றாக்குறை ஏதும் இல்லை., என்றனர்.