/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடிநீர் பரிசோதனை செய்வதில் ஊராட்சிகளில்... ஆர்வமில்லை :தரமற்ற நீரை பருகுவதால் பொதுமக்கள் பாதிப்பு
/
குடிநீர் பரிசோதனை செய்வதில் ஊராட்சிகளில்... ஆர்வமில்லை :தரமற்ற நீரை பருகுவதால் பொதுமக்கள் பாதிப்பு
குடிநீர் பரிசோதனை செய்வதில் ஊராட்சிகளில்... ஆர்வமில்லை :தரமற்ற நீரை பருகுவதால் பொதுமக்கள் பாதிப்பு
குடிநீர் பரிசோதனை செய்வதில் ஊராட்சிகளில்... ஆர்வமில்லை :தரமற்ற நீரை பருகுவதால் பொதுமக்கள் பாதிப்பு
ADDED : நவ 23, 2025 03:44 AM

தண்ணீரில் பல்வேறு உப்புகள் கரைந்து உள்ளன. குறிப்பிட்ட விகிதத்தில் இவை இருந்தால் அதனை பருகும் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது. மாறாக தாது உப்புக்களின் விகிதம் மாறுபாடு ஏற்பட்டால் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக புளுரைடு அதிகம், குறைவாக உள்ள நீரை தொடர்ந்து பருகினால் பல், எலும்புகள் பாதிப்பும், சளி, தொண்டையில் நீர் கட்டிகள் ஏற்படும். வைகை அணையில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நீர் பரிசோதனை மையம் உள்ளன.
இங்கு உள்ளாட்சி அமைப்புகள், தனியார் நிறுவனங்கள் கொண்டு வரும் நீர் மாதிரிகளை பரிசோதனை செய்து முடிவுகள் தெரிவிக் கப்படும்.
மாறுபாடுள்ள நீரை சாதாரண நிலைக்கு கொண்டு வர மாற்று விவரங்களும் தெரிவிக்கப்படும். ஆனாலும் பல உள்ளாட்சி அமைப்புகள் குடிநீரை பரிசோதிக்க ஆர்வம் காட்டுவது இல்லை.
ஆண்டுக்கு இரண்டு முறை குடிநீர் பரி சோதனை அவசியம் என அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால் ஊராட்சிகளில் நீரை பெயரளவுக்கு சுத்திகரித்து விநியோகம் செய்கின்றனர். நீரின் தன்மை, அவற்றில் கரைந்து உள்ள உப்புக்களின் விகிதம், இதனால் ஏற்படும் பாதிப்பு பற்றி தெரிந்து அதனை சரி செய்திட உள்ளாட்சிகள் ஆர்வம் காட்டுவது இல்லை.
பின்பற்றுவதும் இல்லை. கோடை, மழை காலத்திற்கு பின் நிலத்தடி நீர் மாறும் தன்மை கொண்டது. மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையால் நீரின் தன்மை மாறியுள்ளது.
குடிநீர் பரிசோதனை செய்ய பல உள்ளாட்சி நிர்வாகங்கள் முன் வராமல் உள்ளன.
இதனால் தொண்டையில் நீர் கட்டி, சிறுநீரக பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. ஆண்டிற்கு இரு முறை குடிநீர் பரிசோதனை செய்வதன் அவசியம் குறித்து உள்ளாட்சிகளுக்கு மாவட்ட நிர்வாகம் வலி யுறுத்த வேண்டும்.
உவர்ப்பு நீரை பருகும் அவலம்
போடி ஒன்றியம், அணைக்கரைப்பட்டியில் 25 ஆண்டுகளுக்கு முன் கும்பச்சாலை, நூலகம் அருகே போர்வெல் அமைக்கப்பட்டது. இதன் உவர்ப்பு நீரையே பல ஆண்டுகளாக பருகுகிறோம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போர்வெல் நீரை குடிநீர் பரிசோதனை மையத்தில் பரிசோதனை மேற்கொண்டதில் குடிப்பதற்கு தகுதி இல்லாத நீர் என தெரிந்தது. இது குறித்து போடி பி.டி.ஓ., கிராம சபையில் பல முறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. உவர்ப்பு நீரை பருகுவதால் குழந்தைகளுக்கு அடிக்கடி சளி, இருமல் காய்ச்சலால் பாதிக்கின்றனர். சிறுநீர பாதிப்பால் பலர் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் போர்வெல் நீரை காய்ச்சியும், தண்ணீர் கேன்களை விலைக்கு வாங்கி பயன் படுத்துகிறோம். சுகாதாரமான குடிநீரை விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--பி.ராஜா, அணைக்கரைப்பட்டி.

