/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாரியம்மன் கோயில் கட்ட உதவுங்கள்: நாராயணத்தேவன்பட்டி நிர்வாகிகள் வேண்டுகோள்
/
மாரியம்மன் கோயில் கட்ட உதவுங்கள்: நாராயணத்தேவன்பட்டி நிர்வாகிகள் வேண்டுகோள்
மாரியம்மன் கோயில் கட்ட உதவுங்கள்: நாராயணத்தேவன்பட்டி நிர்வாகிகள் வேண்டுகோள்
மாரியம்மன் கோயில் கட்ட உதவுங்கள்: நாராயணத்தேவன்பட்டி நிர்வாகிகள் வேண்டுகோள்
ADDED : நவ 08, 2025 01:42 AM

தேனி: உத்தமபாளையம் தாலுகா, நாராயணத்தேவன்பட்டியில் 300 ஆண்டுகளுக்கும் மேலான மாரியம்மன் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு ஆன்மிக அன்பர்கள் நிதியுதவி அளிக்க வேண்டும் என கோயில் நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் நாராயணத்தேவன்பட்டியில் உட்கடை கிராமங்களாக இருந்த சுருளிபட்டி, சுருளி அருவி, குள்ளப்பக்கவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி பகுதிகளில் வசிக்கும் அனைத்து சமூக மக்களாலும் பாரம்பரியமாக வழிபாடு நடத்தி வந்த திருக்கோயிலாகும்.
நாராயணத்தேவன்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே 15 சென்ட் இடத்தில் கோயில் அமைந்துள்ளது. பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றி தரும் அம்மனாக அருள்பாலிக்கிறார்.
லட்சுமணபிள்ளை என்ற சுதந்திர போராட்ட தியாகி தலைமையில் நிர்வாகிகள் கோயிலை நிர்வகித்துள்ளனர். தற்போது மாரியம்மன் திருக்கோயில்புனரமைப்புக் குழுவில் உள்ளநிர்வாகிகள் 15 பேர் இணைந்து ரூ.1 கோடி மதிப்பில் கோயில் கோபுரம், கட்டுமானப் பணிகளை துவக்கினர். நிதியுதவி இன்றி கோயில் கட்டுமான பணி கடந்த ஓராண்டாக முடங்கி உள்ளன.
புனரமைப்பு பணிகள் நிறைவு செய்ய இன்னும் ரூ.50 லட்சம் நிதியுதவி தேவை உள்ளது. இதனை ஆன்மிக அன்பர்கள், நிதியுதவி வழங்க முன்வருவோர் நிர்வாகி விமல்குமார் என்பவரை 85086 07080 தொடர்பு கொண்டு வழங்கலாம்.
மாரியம்மன் திருக்கோயில் புனரமைப்புக்குழு நிர்வாகி விமல்குமார் கூறியதாவது: நாராயணத்தேவன்பட்டி அனைத்து சமூகத்தினரும் வழிபடும் கோயிலாகும்.
ஆண்டுதோறும் ஆடி, பங்குனியில் திருவிழா கோலாகலமாக நடக்கும். பத்து ஆண்டுகளாக கோயில் சிதிலமடைந்துள்ளது.
ரூ.50 லட்சம் வரை நிதியுதவி பெற்று கட்டுமானத்தை துவக்கி, இடையில் பணிகள் முடங்கிவிட்டன. இன்னும் ரூ.50 லட்சம் தேவை உள்ளது.
இதனால் ஆன்மிக அன்பர்கள், பெரியோர்கள் உதவி செய்ய வேண்டும் என்றார்.

