/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேசிய நுாலக வாரவிழா மாணவர் பட்டிமன்றம்
/
தேசிய நுாலக வாரவிழா மாணவர் பட்டிமன்றம்
ADDED : நவ 19, 2024 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை கிளை நுாலகத்தில் தேசிய நுாலக வாரவிழாவை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் நடத்திய பட்டிமன்றம் நடந்தது.
இதில் வாசிப்பை நேசிக்க வைக்கும் முயற்சியாக 'நினைவில் நீங்காமல் நிற்பது', இணையத்தில் வாசிப்பா, புத்தக வாசிப்பா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது.
இதில் ரங்ககிருஷ்ணன் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் கவுசிக் லிங்கா, புகழேந்தி, விவிஸ்ராஜ், ஆபியா சகானா, லிவின் ஆப்ரகாம் இரு அணிகளாக பேசினர்.
இதே பள்ளி மாணவர் நடுவராக செயல்பட்டார்.
நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவர் அன்புக்கரசன், நுாலகர் சவடமுத்து உள்பட வாசகர்கள் பங்கேற்றனர்.
பங்கேற்ற மாணவர்களுக்கு புத்தகம் பரிசளிக்கப்பட்டது.

