ADDED : பிப் 29, 2024 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லுாரியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
கல்லுாரி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் சீனிவாசராகவன் முன்னிலை வகித்தார். கல்லுாரி அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் சுகன்யா வரவேற்றார். வினாடி வினா, கட்டுரைப்போட்டி, மல்டிமீடியா போஸ்டர் தயாரித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது.
போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உதவி பேராசிரியர் அர்ச்சனா நன்றி கூறினார்.

